ஐ.நாவின் அழைப்பின் பெயரில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு யாழ் தின்னை விருந்தினர் விடுதியில் நடைபெற்ற விசேட நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் (United Nations, UN) 80 ஆவது ஆண்டு நிறைவும் இலங்கையில் குறித்த அமைப்பு கால்பதித்து 70 வருட நிறைவை கொண்டடும் முகமாகவே குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படிருந்தது.
குறித்த அமைப்பு உலக நாடுகளுக்கிடையே நட்புறவு மற்றும் உறவுகளை வளர்த்தல், பன்னாட்டு ஒத்துழைப்பைப் பேணல், போன்ற நடவடிக்கைகளை ஒத்திசைப்பதற்கான நோக்கங்களைக் மையமாக கொண்டு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








