அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலவக்கரை வீதியில் 12,000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
வீரமுனை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பெண்ணை சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.







