ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரைக் கட்டணத்தை செலுத்தியா இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார்.

”ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபாதான் செலவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 11 பேருடன் சென்றுள்ள ஜனாதிபதிக்கு 1.8 மில்லியன்தான் செலவு என்றால், எதிர்க்கட்சியின் உள்ள அனைவரும் குறித்த மூன்று நாடுகளுக்குச் சென்றுவருவோம். இது மிகவும் சுவராஷ்யமாக உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு 2024 ஆம் ஆண்டு முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 1.8 மில்லியன் ரூபா மாத்திரமே வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்டுள்ளார் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் குறித்து கருத்து வெளியிடும் போதே சாமர சம்பத், இவ்வாறு விமர்சனம் முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here