2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்படுவதை தடுக்க கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குறித்த மனு மீதான விசாரணை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய, நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர் அமர்வு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாய்மொழி வாதங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில் குறித்த வழக்கின் அடுத்த கட்டம் எதிர்வரும் 24ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






