முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மார்ச் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசாங்க நிலத்தைப் போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூன்று பேர் கடந்த 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.








