மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் செவ்வாய்க்கிழமை (25/03/2025) இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை கோழிக்க வீதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன்போது வியாபாரத்துக்காக வைத்திருந்து 9 கிராம் 30 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளை கைப்பற்றியதுடன் 28 வயதுடைய வியாபாரியை கைது செய்து ஒப்படைத்துள்ளனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here