இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (27) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு விஜயம் மேற்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள உள்ளிட்ட குழுவினருடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கத் தூதுவர் அங்குள்ள கட்சியின் தலைமையகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அவர் முன்னதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகங்களுக்குச் சென்றிருந்தார்.








