மந்திகை மடத்தடி பகுதியில் சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிகப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் பிரணவன் வயது 25 என்ற நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]








