இளைஞர்
உள்நாட்டுச்செய்திகள்
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!
பாலகுடா களப்பில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று கற்பிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறுக்குக் காரணமாக இயந்திரத்தை பரிசோதிக்க சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது. களப்பில் மூழ்கிய இளைஞரை பிரதேசவாசிகள் மீட்டு கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கு அவர் உயிரிழந்தார்.
கற்பிட்டி காவல்துறை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை...
உள்நாட்டுச்செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்ற கும்பல் – இருவர் கைது!
யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த இருவர் இன்று (03) கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கஸ்துரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்தவர்களை சோதனையிட்டபோது, அவர்களிடம் 3,200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
விசாரணையில்,...
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
இலங்கையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளன. உலகில் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் பாலியல் நோய்களில் எச்.ஐ.வியும் ஒன்றாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி உடலை பலவீனப்படுத்துகிறது. இதனால் சிறிய...
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!
நேற்றைய தினம் (25.08) 21 வயதுடைய இளைஞர் ஒருவர் 400 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி சந்தியில் வைத்து பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...
உள்நாட்டுச்செய்திகள்
சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி – அமைச்சரவை ஒப்புதல்!
நிறுவனங்களில் இருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உதவியால், இளைஞர்கள் நிரந்தரமும் பாதுகாப்பானதும் ஆன வீடுகளை கட்டம் கட்டமாக கட்டியெழுப்ப இயலும்.
இந்தத் திட்டம்,...
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற இளைஞன் கடலில் மூழ்கி பலி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கடலில் நீந்திக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நேற்று (18) நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இளைஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒன்பது நண்பர்கள் இணைந்து உழவு இயந்திரத்தில் பளை கரந்தாய் பகுதியில் இருந்து நேற்று (18.08.2025) மதியம் தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த...
உள்நாட்டுச்செய்திகள்
விளையாட்டு துறையில் புதிய ஊக்கம் – 2025 நிதி பயன்பாடு, 2026 திட்டங்கள் ஜனாதிபதி தலைமையில் பரிசீலனை!
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கான 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் கூட்டம் இன்று (15) காலை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் 2026 ஆம் ஆண்டுக்கான அமைச்சகத்தின் பட்ஜெட் முன்மொழிவுகளைப் பற்றிய ஆரம்ப கலந்துரையாடலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்குபற்றினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், இளைஞர் விவகாரங்கள் மற்றும்...
உள்நாட்டுச்செய்திகள்
ஜனாதிபதி அவர்களே வடக்கில் தொழில் வாய்ப்பில்லாத இளையோருக்கு அரச காணிகளை பகிர்ந்தளியுங்கள் – சபா குகதாஸ் கோரிக்கை!
இளைஞர்களை நோக்கி நாட்டை வழிநடத்த வாருங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அழைப்பு விடுத்துள்ளார் நாங்களும் அதனை வரவேற்கின்றோம் ஆனால் கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளையோர் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் தொழில் வாய்ப்புக்கள் இன்றி குடும்ப வறுமையில் அடிப்படை வாழ்க்கைப் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
75% இளையோர் அடிப்படை மூலதனம் இன்மையால்...
உள்நாட்டுச்செய்திகள்
வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக 15ஆம் திகதி கடையடைப்பு!
வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் கோரியுள்ளார்.
இது குறித்து அந்த சாட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள...
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு!
நேற்றையதினம் யாழில் பூப்புனித நீராட்டுவிழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு - பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
மல்லாகம் - பயிரிட்டால் பகுதியில் நேற்றையதினம் பூப்புனித நீராட்டுவிழா கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு சென்று நேற்றிரவு அங்கு...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


