Exif_JPEG_420

பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு  தீ வைக்கப்பட்டுள்ளமையால் நூற்றிற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தீயில் கருகியுள்ளன.

அத்துடன் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் குடத்தனை வலிக்கண்டிப்பகுதியில் வீதியால் செல்ல முடியாதளவு புகைமூட்டத்துடன் காணப்படுகிறது.

தீப்பரம்பலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனினும் தீயை அணைப்பதற்குரிய ஏந்தவித நடவடிக்கைகளும் இதுவரை சம்மந்தப்பட்ட எவராலும் எடுக்கப்படவில்லை.

பருத்தித்துறை நகரசபையால் குறித்த பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் தமது விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக குடத்தனை கமக்காரர்கள் ஏதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நகர சபையால்  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு  தீ வைக்கப்பட்டுள்ளன.

வைக்கப்பட்ட தீ பல ஏக்கர் அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. உரியவர்கள் விரைந்து கவனமெடுக்கவும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here