2025 ஆம் ஆண்டு உள்ளூர் அதிகார சபைத்தேர்தல் தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் (24.04.2025) இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைக்காக தபால் மூலம் 3,865 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
உள்ளூராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் 102387பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் மூன்று சபைகளுக்கும் 66 பேரை தெரிவு செய்வதற்காக 659 பேர் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








