மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உற்பட்ட மன்னார் கள்ளியடி அ. த. க பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் பாடசாலை பொது மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் திரு. இ. லோறன்ஸ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த  சின்னம் சூட்டும் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரித்தானியாவை சேர்ந்த கள்ளியடி மக்கள் அமைப்பின் இணைப்பாளர் முத்துலிங்கம் விஜிதன் ,  சிறப்பு விருந்தினர்களாக  வெள்ளாங்குளம் பாடசாலை அதிபர் திரு.சாந்தரூபன், தேவன்பிட்டி றோ.க.த.ம.வி பாடசாலை அதிபர் திரு.விஜிதரன், கணேசபுரம் ஆரம்ப பாடசாலை அதிபர் திரு.தயாபரன் மற்றும் Open நிறுவன ஊழியர் திருமதி.யான்சி  மற்றும் சிவானந்தன் உட்பட கள்ளியடி பாடசாலையின்  பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னங்களை சூட்டி வைத்திருந்தனர்.

கள்ளியடி பாடசாலையானது அண்மைகாலங்களாக பழையமாணவர்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் பல்வேறு துறைகளிலும் கடந்த காலங்களை பார்கிலும் வளர்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

[மன்னார் நிருபர்எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here