யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.

யாழ்ப்பாண நகர மண்டபம், யாழ்ப்பாணம் பொதுசன நூலகம், கீரிமலை ஜனாதிபதி மாளிகை, நல்லூர் நீர்த்தாங்கி, குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு அமைச்சர் குழுவினர் விஜயம் செய்தனர்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, சிறீபவானந்தராஜா உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் சந்திரசேகரிடம் முல்லைத்தீவில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது பதிலளிக்க மறுத்து விட்டார் என  எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here