உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்குச் செல்லுமாயின் தமிழ்க் கட்சிகளும் தமிழர்களும் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றவர்களாக மாறிவிடுவர் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ்க் கட்சிகள் ஓரணியில் ஒற்றுமையாக இனிவரும் காலங்களில் பயணிக்கவில்லையாயின் மக்களால் மீண்டும் புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here