வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 494 கிலோ 48 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இன்று (28) எரியூட்டி அழிக்கப்படவுள்ளது.
பலத்த பாதுகாப்புடன் புத்தளம் – பாலாவி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரியூட்டல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடற்படை மற்றும் சுற்றிவளைப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








