அயன அயல் ஒருங்கல் வலயம் நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய , சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர்
வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களி்ல் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை,ஹம்பாந்தோட்டை, வவுனியா , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








