வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து வரும் அதிகபட்ச அந்நிய செலாவணியை அனுப்பும் நாடுகளில் குவைத் முதலிடத்தை பிடித்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

2025ல் குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பிய தொகை 893 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

வருடத்துக்கு சுமார் 80,000 இலங்கையர்கள் வேலைக்காக குவைத் செல்கின்றனர். இது நாட்டின் மொத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பில் 30% வீதம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கட்டார் 2வது இடத்தையும் ஐக்கிய அரபு அமீரகம் 3வது இடத்தையும் பிடித்துள்ளதோடு,சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முக்கிய பங்களிப்பாளர்களாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இத்தாலி, இங்கிலாந்து மாலைதீவு, அவுஸ்திரேலியா, இஸ்ரேலில் உள்ள இலங்கை சமூகமும் கணிசமாக பங்களிக்கிறது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணம் இலங்கையின் முக்கிய அந்நிய செலாவணி மூலங்களில் ஒன்றாக உள்ளது என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here