கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் வாழைச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்த விலையில் கொண்டு சென்று சந்தையில்  கொடுப்பதற்கு கொண்டு செல்வதற்கான செலவே விற்பனை செய்கின்ற வாழைக்குலையில் கிடைக்காத நிலையில் மரத்துடனே அப்படியே விட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். வெளிமாவட்ட வியாபாரிகளும் கொள்வனவுக்கு வருவதில்லை என தெரிவிக்கின்றனர்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here