முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டியவில் உள்ள ‘சன்ஹிந்த செவன’ வீட்டுத் தொகுதிக்கு அருகில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலன்னாவையைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபரிடம் இருந்து வெல்லம்பிட்டி மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்குள் திருடப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here