சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் WHO இன் 78வது உலக சுகாதார மாநாட்டின் ஒரு பகுதியாக, இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சுகாதாரத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகள், 1,000 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், சுகாதாரத் துறையில் உள்ள மனிதவளக் குறைபாடு, வெளிநாட்டுக்கு சுகாதார வல்லுநர்கள் வெளியேறும் பிரச்சினை, மற்றும் WHO உதவியுடன் நடைமுறையில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

2025 ஐப்பசி மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு டெட்ரோஸுக்கு அமைச்சர் அதிகாரபூர்வமாக அழைப்பு வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here