தேசியக் கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தை மேம்படுத்தும் நோக்கில் இன்று (12.06.2025) காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.
கலந்துரையாடலில் கூட்டுறவு செயற்த்திறன் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மாவட்ட ரீதியான கூட்டுறவு தலைவர்கள், முகாமையாளர்கள் மற்றும் கிராமமட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு கூட்டுறவு செயல் திறன் தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரனித்தப்படுத்தக்கூடிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் கிராமமட்ட கூட்டுறவு அமைப்புகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.








