வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல முறை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோல், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, தென், வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் சேதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அவற்றைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here