ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்தம் திங்கள்கிழமை பிற்பகுதியில் அமலுக்கு வருவதாக கூறப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு சற்று முன்பு, இஸ்ரேலிய படுகொலைத் தாக்குதலில் ஈரானிய அணு விஞ்ஞானி செடிகி சபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் ஆங்கில மொழி செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
செய்தி ஊடகத்தின் கூற்றுப்படி, கஸ்பியன் கடலுக்கு அருகிலுள்ள வடக்கு ஈரானிய நகரமான அஸ்தானே அஷ்ரஃபீயில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
செய்தி ஊடகம் வெளியிட்ட விஞ்ஞானியின் குடும்ப புகைப்படம், முதியவர்கள், பல குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் காட்டுகின்றது.
இதற்கும் மேலாக இஸ்ரேல் தனது 12 நாட்கள் தாக்குதல்களில் குறைந்தது 14 ஈரானிய அணு விஞ்ஞானிகளை குறிவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








