கிளிநொச்சி இயக்கச்சி A9 வீதி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது இரவு 10.30 மணியளவில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது .
நடந்து சென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்பட்டபோது. குறித்த நபர் தடக்கி வீழ்ந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.








