இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் திரு.மசட்சுகு அசகாவா வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநராக ஜனாதிபதியை அன்புடன் வரவேற்றார்.
அமைதியான மற்றும் ஒழுங்கான ஜனநாயகத் தேர்தலை நடத்தியதற்காக இலங்கை மக்களைப் பாராட்டிய திரு. அசகாவா, 1966 ஆம் ஆண்டு வங்கி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ADB மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால கூட்டாண்மையை எடுத்துக்காட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக, ADB இலங்கையின் சவால்களை எதிர்கொள்வதில் உறுதியான பங்காளியாக இருந்து, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது, சீர்திருத்த முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் போக்குவதற்கும் முக்கியமான வரவு செலவுத் திட்ட ஆதரவை வழங்கியுள்ளது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் ஜனாதிபதியின் தலைமையின் முக்கிய பங்கை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் நிலையான, மற்றும் நெகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துகிறார் எனவும் கூறியுள்ளார்.
இலங்கை தனது முழுத் திறனையும் வெளிக்கொணரும் வகையில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொள்வதால், இலங்கையுடனான தனது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு ADB இன் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கை மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி திஸாநாயக்கவின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து திரு.அசகாவா நிறைவு செய்துள்ளார்.








