Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைந்த  ஷானி அபேசேகர…!

ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, ஒரு வருட ஒப்பந்த சேவை அடிப்படையில் பொலிஸ் திணைக்களத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளார். நேற்று (10.10) இடம்பெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஷானி அபேசேகர ஒப்பந்த சேவையின் அடிப்படையில் ஒரு வருட சேவைக் காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்...

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…!

கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று (11.10) காலை இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி...

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; பெண் பலி…!

அவிசாவளை - கொழும்பு வீதியில் பாதுக்க மாவத்தகம கொடிகஹகந்த மாவத்தைக்கு அருகில்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  பாதுக்க பொலிஸார் இன்று வியாழக்கிழமை (10.10) தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களும்  பஹத்கமையில் இருந்து மீபே நோக்கி பயணித்துள்ளதுடன்,  அதே...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன பகுதி மூடப்பட்டது…!

சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள வெலிப்பன்ன இன்டர்சேஞ்சை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெலிப்பன்ன வெளியேறும் மற்றும் நுழைவு வீதிகள் தற்போது முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அந்தந்த சந்திப்பில் இருந்து போக்குவரத்து நுழைவது மற்றும் வெளியேறுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…!

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடருமெனவும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை...

இன்றைய நாளுக்கான வானிலை…

இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற  மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும்  என வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய,சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய...

கட்டுப் பணத்தினை செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா…!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10.10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினை செலுத்தினார். மேலும், வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை; சந்தேக நபருக்கு விளக்கமறியல்…!

கொழும்பு, வாழைத்தோட்டம் , டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குண நேற்று (09.10) உத்தரவிட்டுள்ளார். காலி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே...

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது; உலக வங்கி…!

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது என தெரிவித்துள்ள உலக வங்கி சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளது. 2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது. தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு...

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை…!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (10.10.2024) கையளிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு, கிரீஸ் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, ​​இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...