Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ள மாணவர்கள்!!!

13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 3.7 வீதம் பேர் புகைப்பிடிக்கும்...

கோர விபத்து; 27 பேர் படுகாயம்…

கொழும்பு - பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை குறித்த எச்சரிக்கை!!!

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து  காணப்படுவதனால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையும் மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின்  சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும்  மாலை...

பொலிசாரிடம் சரணடைந்த 11 மாணவிகள்; யாழில் அதிர்ச்சி!!!

யாழ். ஊர்காவற்றுறை, பெண்கள் பாடசலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியின் சித்திரவதை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட...

மொட்டு கட்சியின் காரியாலயத்திற்கு முன் கடும் பதற்றம்!

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அந்த இடத்திற்கு வந்து கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்ததை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவ்விடத்தில் இருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தடுத்துள்ளமை...

மாத்தறை வைத்தியசாலையின் செயலுக்கு எதிராக நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு….

மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி. என். ஏ. பரிசோதனையை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதான நீதவான் அருண புத்ததாச இன்றையதினம் (28) உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி என்ற பெண்  வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி குழந்தையை...

மூடப்படும் கொழும்பு-கண்டி பிரதான வீதி!!!

 பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி இன்றைய தினம் மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றைய தினம் 2 மணித்தியாலங்களுக்கு குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பித்தக்கது.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளைஞனின் மரணம்…

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதி சம்பவிடத்தில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த பி.பனுஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையிலேயே இத் துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் மீதான மேலதிக...

மக்களுக்கு எச்சரிக்கை!!!

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால்  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையும் மேலும் தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன்  நுவரேலியா மாவட்டத்தின்  சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு…

இன்று (27) முதல் 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒன்லைன் முறையூடாக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு...
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...