Wednesday, July 1, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

திருகோணமலையில் இடம்பெற்ற வெசாக் தின நிகழ்வு…!!

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  வெசாக் நிகழ்வுவில் மஹாமாயபுர  ஸ்ரீ சித்தத்தாராம விஹாரவாசி, வணக்கத்திற்குரிய கமுனுபுர சுமேதானந்த தேரர் அவர்களினால் சொற்பொழிவொன்று மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமை தாங்கியுள்ளார். இதற்கமைய இவ்வருட வெசாக் பண்டிகையை சிறப்பிக்கும் முகமாக மே...

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை  வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி 3 நாட்கள் விஜயமாக வடக்கிற்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார். அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார். இவ்வாறு 10...

கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை , கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.மேலும்  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெசாக்தின வாழ்த்துச்செய்தி….

வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும். "சப்பத்த சம்மானசோ" என அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தை இன்று நாம் நினைவுகூர வேண்டும். இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்நாட்டைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்....

பௌத்த கொடியின் வர்ணங்களில் ஒளிரவுள்ள தாமரை கோபுரம் ..!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24)தாமரை  கோபுரம் பௌத்த கொடி வர்ணத்தில் ஒளிரும். கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை...

வெள்ளவத்தையில் 56வது ஒசுசல  மருந்தகம்  திறந்து வைப்பு..!

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் வெள்ளவத்தை கிளையான  ராஜ்ய ஒசுசல மருந்தகம் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவினால் நேற்றைய தினம் (21) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. குறித்த மருந்தகம், வெள்ளவத்தையில் உள்ள இலங்கை வங்கிக் கிளைக்கு அருகில் அமைந்துள்ள அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் (SPC) வலையமைப்பின் கீழ் 56ஆவது மருந்தகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுகாதார...

நலன்புரி உதவிகள் வழங்குவதற்கான காலம் நீடிப்பு..!

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த  விசேட  வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜூன் 30, 2026 வரை நன்மைகளைப் பெறும் குறிப்பிட்ட நபர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட வர்த்தமானியில் , நன்மைகள் பெற தகுதியுள்ள ஒரு பிரிவினருக்கு உதவித்தொகை...

இப்ராஹிம் ரைசிக்கு நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி..!

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்டோருக்கு  இன்றைய தினம் (22) இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த மௌன அஞ்சலியானது சபையின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் (Prasanna Ranatunge) முன்மொழியப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது...

கொழும்பில் கரையொதுங்கிய அரிய வகை மீன்..!

கொழும்பு - கல்கிஸ்ஸை பகுதியில் கல்குல்லா எனப்படும் அரியவகை மீன் ஒன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. இந்த மீன் இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன எனவும் நிலத்திற்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வகை மீன்கள் உணவாக உற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

12 வயது சிறுவனைக் காணவில்லை..!

மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில், 032 2 268 221 அல்லது 071 8 592 927 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மதுரங்குளி பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
- Advertisement -

Latest News

பாகிஸ்தானில் பயிற்சி வகுப்பு கூரை இடிந்து விபத்து: 14 மாணவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர் நகரில் ஒரு தனியார் பயிற்சி வகுப்பின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள்...