Thursday, July 9, 2026
No menu items!

News Line

ரயில் சேவை இடைநிறுத்தம்

வடக்கிற்கான தொடரூந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தொடரூந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி  7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென  தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு தொடரூந்து மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே....

இன்றும் பல பகுதிகளில் மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல...

உணவின் விலையில் எற்பட்ட அதிகரிப்பு.!

அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை கருத்திற்கொண்டு அடுத்த சில நாட்களில் உணவின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென தெரிவித்துள்ளது. சோறு, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகள் எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கப்படுமென , சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்  தெரிவித்துள்ளார். அரிசி, மரக்கறிகள், இறைச்சி,...

சிறைச்சாலையில் அதிகரிக்கும் போதைப் பொருள் குற்றவாளிகள்!

2022ஆம் ஆண்டில் சிறைப்படுத்தப்பட்ட கைதிகளில் நூற்றுக்கு 53 சதவீதமானவர்கள் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டிருக்கும் புதிய கணக்காய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக  13,794 கைதிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என  அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு போதைப்பொருள் குற்றத்திற்காக சிறைப்படுத்தப்பட்ட கைதிகளில் 4,406 பேர் குற்றவாளிகள் என்பதுடன் 9,388 பேர்...

அதிகரிக்கவுள்ள அஸ்வெசும கொடுப்பனவு

2024 ஆம் ஆண்டு  முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்து ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை...

தொற்று நோயால் உயிரிழந்த  சிறைக்கைதி

தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாத்தறை சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (22) குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்தார். மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த...

தேசிய மாநாடு குறித்து சி.வி.கே. சிவஞானம் கருத்து

சூறாவளி அல்லது சுனாமி அடித்தாலே தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமென்று கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 18 ஆம்...

இம்ரான் கானுக்கு பிணை

அரச இரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றவாளிகளான இம்ரான் கான் மற்றும் அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரோஷி ஆகியோர் சார்பில் பிணை கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை...

நாட்டில் பரவிவரும் JN.1 கோவிட்!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கோவிட் மாறுபாடு இலங்கையிலும் பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் வைத்ய சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார். JN.1 கோவிட்டானது, ஒமிக்ரோன் கோவிட்டின் துணை வகையாககும் இருமல், வாசனை மற்றும் சுவை இழப்பு, அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம்,...

தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான  T20 தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டி நேற்றைய தினம்(22)  பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும்...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...