Monday, July 13, 2026
No menu items!

News Line

கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரின் சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து...

மைத்திரியின் அதிரடி செய்தி..!

சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைகளைப் பின்பற்றிய எம்மால், சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை பிரிதொரு கட்சியுடன் இணைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் 108ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த...

பிரித்தானியாவின் புதிய  டிஜிட்டல் மாற்றீடு விசா திட்டம்..!

பிரித்தானியாவில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் உடல் குடியேற்ற ஆவணங்களுடன் eVisa க்கு மாறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் முழு டிஜிட்டல் குடியேற்றம் மற்றும் எல்லை அமைப்பை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 17 புதன்கிழமை முதல், இங்கிலாந்தில் உள்ள விசா வைத்திருப்பவர்கள் தங்கள் eVisa ஐ அணுக பிரித்தானிய...

இலங்கையர்கள் பயணித்த கப்பல் கவிழ்ந்து விபத்து..!

ஓமன் வளைகுடாவில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, இலங்கையர்கள் பயணித்த கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த, 21 இலங்கைப் பணியாளர்களை ஈரானிய மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற குறித்த கப்பல், தெற்கு நகரமான...

12 வயது சிறுவன் வெட்டிக்கொலை!

அம்பாந்தோட்டை - பெலியத்தை பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தந்தையை வெட்டிக் காயப்படுத்திய கும்பல், 12 வயதுடைய மகனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவத்தில் 38 வயதுடைய தந்தை படுகாயங்களுடன் பெலியத்தை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காணித் தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைச் சந்தேகநபர்கள் பிரதேசத்தில் இருந்து...

17 வயது சிறுமிக்கு  5 வருடங்களாக நடந்த கொடூரம்!

மனைவி உயிரிழந்ததையடுத்து தனது 17 வயது மூத்த மகளை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்  என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரது மனைவி 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாகவும், இவர்...

வெள்ளத்தில் மூழ்கிய சர்வதேச விமான நிலையம்..!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக  (16) பெய்த கனமழை மற்றும் புயல்காற்று என்பவற்றால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகளில் நீர் தேங்கியதனால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, டுபாய் சர்வதேச விமான நிலையத்தில்...

விறுவிறுப்பான வெற்றியை பதிவு செய்த ராஜஸ்த்தான்..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்த்தான் முதலில்...

மாவோ அமைப்பினரை இலக்கு வைத்த இந்திய இராணுவம்..!

இந்தியாவின் - சத்தீஸ்கரின்(Chhattisgarh) காங்கர் மாவட்டத்தில் மாவோ அமைப்பினருக்கும், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 18பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மூன்று இந்திய பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 19 ஆம் திகதி இந்திய மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் 60,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்...

மியான்மரில் கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு..!

மியான்மரில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில், கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு கோரி தூதரகம் பல கோரிக்கைகளை முன்வைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதர் ஜனக பண்டார தெரிவிதுள்ளார். மியான்மர் பிரதமரையும் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்த நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...