இலங்கையில் முகநூல் குற்றங்கள் தொடர்பில் 2023ம் ஆண்டில் 31,548 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் சிரேஸ்ட பாதுகாப்பு பொறியியலாளர் சாருக அமுனுபொல இதனை தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடுகளில் அதிகளவானவை முகநூல் ஊடாக பெண்களை துன்புறுத்திய சம்பவங்கள் தொடர்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான 10,774 முறைப்பாடுகள் நாடு முழுவதிலும் பதிவாகியுள்ளதுடன், போலி முகநூல் கணக்குகள் தொடர்பில் 5,188 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், அனுமதியின்றி முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் 7,499 முறைப்பாடுகளும், நிதி மோசடிகள் தொடர்பில் 1,609 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, குருநாகல், கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளிலே அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here