Friday, July 10, 2026
No menu items!

News Line

யாழில். முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்றைய தினம் (11) வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில்  முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.     சம்பவ இடத்திற்கு விரைந்து சட்ட வைத்திய அதிகாரி , தடயவியல் பொலிஸார்  ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அப்பகுதியை சேர்ந்த விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் (வயது 62) என்பவரின் சடலமே இவ்வாறு ...

சபரி மலை சென்ற யாழ். ஐயப்ப பக்தர் உயிரிழப்பு

சபரி மலைக்கு செல்வதற்காக  விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் நேற்றைய தினம் (11) உயிரிழந்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த வேளை திடீரென உடல்நல குறைப்பாடு ஏற்பட்டது.   அது தொடர்பில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்கப்பட்டது , விமானம் தரையிறங்கியதும் தயராக இருந்த...

திருகோணமலையில் கைதான காவல்துறை அதிகாரி

ஐஸ் போதைப்பொருளை கைமாற்ற முயன்ற யாழ். கோப்பாய் காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம்(11) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும்...

இலங்கை கிரிக்கெட் தடை நீக்கம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்

கொழும்பிலுள்ள சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்ட (ICC) இலங்கை கிரிக்கெட்டின் (SLC) இடைநிறுத்தம் பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் , கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஐசிசி பிரதிநிதிகள் திருப்தியடைந்துள்ளதாகவும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர்...

நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டம்

தற்காலிக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு வருபவர்களைத் தடுத்தால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என நிதி அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள் தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ளமையினால்,  நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறது. ஆனால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent...

திருகோணமலை கடற்கரையில் தொடர்ச்சியாக குவியும் வெளிநாட்டு குப்பைகள்  

திருகோணமலை கடற்கரையோரத்தில் தற்போது அதிகளவு குப்பைகள் குவிந்து வருவதாகவும், அதில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை  நேற்றைய தினம் (11) தெரிவித்துள்ளது. தற்போது கடற்படை மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியை திருகோணமலை மாநகர சபை மேற்கொண்டு...

தமிழரசுக் கட்சி தலைமை தெரிவுக்கு இரகசிய வாக்கெடுப்பு நடார்த்த முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் பதவிக்காக போட்டியிடும் மூவரும் விட்டுக்கொடுப்பு இல்லாததால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தி தலைவரை தெரிவு செய்வதென நேற்று(11) முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பியோகேஷ்வரன் மூவரும் நேற்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெல, சிறிதரனின் விடுதியில் கூடி பேசியுள்ளனர். புதிய...

30 வீதத்தினால் மருந்துப்பொருள் விற்பனையில் வீழ்ச்சி

தற்பொழுது நாட்டில் மருந்துப்பொருட்களின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள்  சங்கத்தின் தலைவர் சந்திக்க சான்கந்த தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். கடும் பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மிகவும் அத்தியாவசியமான மருந்து வகைகளை மட்டுமே கொள்வனவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு கொள்வனவு செய்யும் மருந்து வகைகள் ஒரு நாள் அல்லது இரண்டு...

மாற்றுக் கருத்துடையவர்களை அடக்குவதற்கே பயங்கரவாத திருத்தப்பட்ட சட்டமூலம் : விஜித ஹேரத் சுட்டிக்காட்டு

கடந்த புதன் கிழமை  நாடாளுமன்ற அமர்வில்  இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , அத்துடன் மக்கள் வீதிக்கு இறங்கும் போது...

அரச சொத்தில் நடுக்கடலில் ராஜபக்சக்கள் நடத்திய ஆடம்பர விருந்து!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ உட்பட பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த விருந்து ஏற்பாடுகள் குறித்து வெளியான செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது. கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விமானப் போக்குவரத்து...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...