Friday, July 10, 2026
No menu items!

News Line

தீ விபத்தில் இருவர் பலி – யாழில் சம்பவம்

யாழ் பருத்தித்தறைப் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ் பருத்தித்தறைப் பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று (02.01.2024) காலை தீ விபத்து ஏற்பட்டள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்ததைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான நபரும், வேலாயுதம் ரவி என்கின்ற...

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நாடு

கிறிஸ்மஸ் தீவு என அழைக்கப்படும் கிரிபாட்டி தீவிற்கு அடுத்தபடியாக முதல் நாடாக நியூசிலாந்து 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை   கொண்டாடியுள்ளது. இலங்கை நேரப்படி நேற்று (2023.12.31)  4.30 மணியளவில் நியூசிலாந்தில்  நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசு, வானவேடிக்கைகளுடன் அந்நாட்டு மக்கள் வெகு விமர்சையாக  கொண்டாடிவருகின்றனர்.

புத்தாண்டு வாழ்துச் செய்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம்.என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்கும் ஆரம்ப கட்ட முயற்சிகளுக்கு உதவியாக இருந்தது. இருப்பினும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதேபாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும்....

வவுனியாவில் சோகம் இளைஞர் உயிரிழப்பு.

வவுனியா ஆதார வைத்தியசாலையில் இன்று காலை  காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். செட்டிகுளம் முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற  22 வயதுடைய   இளைஞரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த நபர்  மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சைகள் பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அந்தோனியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனை

யாழ்ப்பாணம் - குருநகர் பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.  

புத்தாண்டில் துன்பமிக்க புதுவரிகள்

கடந்த 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட VAT வரி அதிகரிப்பு சட்டமூலமானது இன்று அதிகாலை முதல் சட்டமாக்கப்பட்டது.  இதனால் VAT வரியானது 18 வீதமாக உயர்ந்துள்ளது. 12 % ஆல் எரிபொருட்களின்  விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக 92ரக  பெற்றோலின்விலை ரூபா 40 வினாலும்  95ரக பெற்றோல் விலை ரூபா 35 வினாலும் டீசல்...

VAT வரி அதிகரிப்பு: விண்ணை தொடும் பொருட்கள் விலை

 15% ஆக இருந்த VAT வரி, இன்று (01) அதிகாலை  முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் VAT வரி அமுலாகியுள்ளது. எரிபொருள், இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றிற்கு புதிய   VAT  வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர்,...

திறைசேரி உண்டியல்கள்  ஏலத்தில். !!

160,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை  எதிர்வரும் ஜனவரி மாதம் 3  திகதி ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்  ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி  அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182...

பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை (26) மெல்பேன் கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டி 4 ஆவது நாளான நேற்று முடிவடைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...