Saturday, June 13, 2026
No menu items!

புதிய செய்திகள்

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு

காசா மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த உடன்பட்டு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பதிலாக ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம்...

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் 45 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 14...

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு

2024 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கை இந்த வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய தொடரை நடாத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. நேற்று இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற...

இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்

இன்று இந்தியாவின் அஹமதாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டுமானால், அதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகள் பங்குபற்றும் இக்கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக...

சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபையமர்வுகள் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே...

2024ல் ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல்...

6 வது முறை சம்பியன் ஆனது அவுஸ்திரேலியா

 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ண இறுதிப் போட்டி நேற்றைய தினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்றிருந்தது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய,துடுப்பெடுத்தாடிய இந்திய...

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி, தென்னை பயிர்செய்கை நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மன்னார் - ஆண்டாங்குளம் பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் இதன்போது நடப்பட்டிருந்தன. இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இரண்டாவது தென்னை முக்கோண வலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உலக...

2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.donets.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி நடைப்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், 337956 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளையும்  பரீட்சை திணைக்களம்...

பாடசாலை விபத்தில் உயிரிழந்த சிறுமி – வெல்லம்பிட்டியில் சம்பவம்

வெல்லம்பிடிய பகுதியில் குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.   மேலும், இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தில் ஆறு வயதுடைய செஹன்சா என்ற சிறுமியியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணி...
- Advertisement -

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...