பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் சேவையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை நேற்று (11) ஹொரணை பிரதான பேருந்து நிலையத்தில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டது.
ஹொரணை, இங்கிரிய, மொறக்கஹேன மற்றும் அக்குரணை பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது.
ஹொரணையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் நகரத்தினூடாக செல்லும் பேருந்துகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 151 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பரிசோதிக்கப்பட்டனர். பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருக்கும் போது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சாரதிகள் மற்றும் 2 நடத்துனர்களை பொலிசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளால் இயக்கப்பட்ட 4 பேருந்துகளையும் பொலிசார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், குட ஓடுவ, பலப்பிட்டிய, கலுகஹின்ன, கொவின்ன மற்றும் எகொடஹேன பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.








