Saturday, July 11, 2026
No menu items!

Updates

வவுனியாவில் மூன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு.!

வெசாக்  பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நடாளாவிய ரீதியில் 10 பெண் கைதிகள் உட்பட 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் சிறு குற்றங்கள் மற்றும்...

கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை , கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.மேலும்  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெசாக்தின வாழ்த்துச்செய்தி….

வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும். "சப்பத்த சம்மானசோ" என அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தை இன்று நாம் நினைவுகூர வேண்டும். இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்நாட்டைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்....

தோட்டத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!

தொழில் ஆணையாளர் நாயகத்தால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த அறிவித்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1700 ரூபாவாக அதிகரிப்பதை உறுதிப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 01ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி...

இருபது கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கைது..!   

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 47 வயதுடைய  பெண்னொருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளதாக  விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் தொகையை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பயணப் பையினுள் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கோதுமை மா அடங்கிய 3...

இப்ராஹிம் ரைசிக்கு நாடாளுமன்றத்தில் மௌன அஞ்சலி..!

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்டோருக்கு  இன்றைய தினம் (22) இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த மௌன அஞ்சலியானது சபையின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் (Prasanna Ranatunge) முன்மொழியப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஸர்பைஜான் மாகாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது...

கொழும்பில் கரையொதுங்கிய அரிய வகை மீன்..!

கொழும்பு - கல்கிஸ்ஸை பகுதியில் கல்குல்லா எனப்படும் அரியவகை மீன் ஒன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. இந்த மீன் இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன எனவும் நிலத்திற்கு வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வகை மீன்கள் உணவாக உற்கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

12 வயது சிறுவனைக் காணவில்லை..!

மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரியும் நிலையில், 032 2 268 221 அல்லது 071 8 592 927 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மதுரங்குளி பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் இரண்டு நாட்களில் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன..!

கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இவ்வாறு முறிந்து விழுந்த மரங்களில் ஆபத்தானவை அல்ல என அடையாளப்படுத்தப்பட்ட மரங்களும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. கொழும்பு நகர எல்லைக்குள் சுமார் 200 ஆபத்தான மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இதுவரை 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை காணிகள் இந்திய நிறுவனத்திற்கு..!

மன்னார் - நடுக்குடா பகுதியில் உள்ள தமிழர்களின் குடியிருப்புக் காணி உட்பட 160 ஏக்கர் நிலம் மணல் அகழ்விற்காக இந்திய நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, குறித்த நிலப்பரப்பைச் சுற்றிலும் கொங்கிரிட் தூண்கள் மற்றும் முற்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், மணல் அகழ்விற்காக இந்தப் பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுமார்...
- Advertisement -

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...