இன்னும் சில தினங்களில் Realme GT 7 Pro என்ற புதிய ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்ய உள்ளது.
சீன சந்தையில், இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 4-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவில் நவம்பர் 26-ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Qualcomm Snapdragon 8 Elite 6.1 chipset பொருத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
இது தவிர, இது 6500mAh பேட்டரி, 6.78-இன்ச் LTPO OLED Display மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 அடிப்படையிலான Realme UI 14 operating system ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
5 ஸ்டோரேஜ் மற்றும் மூன்று வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் விற்கப்படும் விலையின்படி, இதன் ஆரம்ப விலை ரூ.43,800 ஆகும். சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மாறக்கூடும்.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஸ்மார்ட்போன் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை, ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இதே போன்ற அம்சங்களுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








