பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா ஆகிய ஏழு மாவட்டங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள பத்து வேட்பாளர்களும் வெல்ல வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த கௌதம புத்தனை போல் பேசுகின்ற நபர்களை நான் என் அரசியல் வாழ்வில் பலமுறை பார்த்து இருக்கிறேன், இப்போதும் பார்க்கிறேன்.
இந்த பசப்பு வார்த்தைகளில் நமது மக்கள் ஏமாந்து விட கூடாது. உண்மையில் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு துன்பங்களுக்கு இன்று தேனொழுக பேசும் இவர்கள்தான் முதல் காரணம்.
ஆகவே, இவர்கள் எப்படி எம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியும்? எம்மை நாம்தான் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்.
தேர்தலில் பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, எதிர்வரும் பத்தாம் பாராளுமன்றத்தில் தாம் ஒரு அழுத்த அணியாக இடம் பெற வேண்டும் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








