Tuesday, November 17, 2026
No menu items!

ஆர்ப்பாட்டம்

இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட சம்மாந்துறை மக்கள்..

தங்களது கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை - மல்வத்தை கணபதிபுரம் பகுதி மக்கள் இராணுவத்திடம் கோரியுள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று (19) அங்குள்ள இராணுவ முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். சட்டவிரோத மதுபான விற்பனையால் தங்களது தரப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளதாகவும் வீடுகளில் மோதல்கள் இடம்பெறுவதாகவும்...

கொழும்பில் ஆயுர்வேத மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யக்கல சந்தியில் ஆயுர்வேத மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    

ஆர்ப்பாட்டத்தில் குதித்த கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்..!

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் நேற்றைய தினம் (23.01.2025) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடியபடி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன் போது தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் ஆகிய நாங்கள் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மெகா...

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளரை CIDயில் ஆஜராகுமாறு உத்தரவு..!

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஞாயிற்றுக்கிழமை (12/1/2025) அவரது அலுவலகத்தில் வைத்து கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி முல்லைத்தீவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம்...

கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

மாத்தளை பிரதேசத்தில் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு நீதி கோரி இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவர் நண்பர்களுடன் நண்பனின் காதலியைச் சந்திக்கச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று சிறுவர்களும் சிறுமியின் தந்தை உட்பட ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதில்  17 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த கொலை தொடர்பாக...

அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (01.10.2024) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் குழப்பத்தினை  ஏற்படுத்தியமையினால் பதட்டமான நிலமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சிறுவர் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அந்த பகுதிக்கு...

இன்று முதல் கறுப்பு வாரம் பிரகடனம்…..!

இன்று (12) முதல் 19ம் திகதி வரை கறுப்பு எதிர்ப்பு வாரத்தை அறிவித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பில் தமது யோசனைகள் உள்ளடக்கப்படாமையே இதற்கு காரணமென கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள்...

வருமானம் குறைந்தால் சம்பளம் குறையும்! 

அரச துறையினரின் போராட்டங்கள் அதிகரித்ததனால் அரசாங்கத்தின் வருமானம் குறைவடையும் எனவே  தன்னிச்சையாகவே அரச துறையினரின் சம்பளம் குறையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற தரப்புக்கு ஆதரவான குழுக்கள் ஆட்சியைப் பிடித்தாலும், நாட்டை 2 வாரங்களுக்கு மேல் நடத்திச்...

அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்…

அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு லொட்டஸ் வீதியில் நிதி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸார், இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று 4 விதமான போராட்டங்கள்...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img