Monday, June 8, 2026
No menu items!

இந்திய மீனவர்கள்

“கச்சத்தீவை ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம்” – இந்திய அரசியல் முரண்பாடுகளை சுட்டிகாட்டும் விஜித ஹெராத்!

கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார். இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள்...

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும் – அன்னராசா!

தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள மீன்பிடித் தடை காலத்தில் மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இருநாட்டு அரசாங்கங்களையும் வலியுறுத்துவதற்கு இந்திய மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதிகளில்...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த வெளியீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீனவர்கள் கைது மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்தும் விவாதங்கள்...

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.  

இந்திய மீனவர்கள் மூவர் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றுடன் இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்குஅழைத்துவரப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம்...

கச்சத்தீவு திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்..!

கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கச்சத்தீவில் தமிழக மீனவர்களைச் சந்தித்த அமைச்சர் இலங்கை இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இலங்கை,...

அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது!

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்கள் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 32 இந்திய மீனவர்களும் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் நேற்றிரவு மன்னார் நீதிவான் முன்னிலையில்...

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது..!

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள்  நேற்று புதன்கிழமை (19/02/2025) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன், மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் கைது...

இலங்கை கடற்பகுதியில் வைத்து அதிரடியாக இந்திய மீனவர்கள் கைது..!

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், கரைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img