யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07) அப்பகுதியில் சோதனை நடத்தியுள்ளனர் .
இதன்போது கண்டெடுக்கப்பட்ட கஞ்சா கையிருப்பின் சந்தை பெறுமதி 36 மில்லியன் ரூபாய் என இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பலாலி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






