Friday, June 5, 2026
No menu items!

இரவு

மாரவிலவில் துப்பாக்கிச் சூடு: 30 வயது பெண் உயிரிழப்பு !

மாரவில, மரந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முன்னாலிருந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அருகில் இருந்த 10 வயதான பிள்ளையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மட்டுப்படுத்தப்பட்டுள்ள அஞ்சல் தொடருந்து சேவை !

சீரற்ற காலநிலை காரணமாகக் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், இரவு நேர நீண்ட தூரத் தொடருந்து சேவைகளைத் திட்டமிட்டபடி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை…!

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம்...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும்  காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள்  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்  காணப்படுகிறது. மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவு...

மருத்துவமனை பாதுகாப்பு பணியாளர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் போதனா வைதியசாலைக்குள் உந்துருளியுடன் நுழைந்தவர்  மருத்துவமனை பாதுகாப்பு பணியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று  இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை உந்துருளியில் ஏற்றியவாறு வந்த நபரொருவர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்து சிகிச்சையளிக்குமாறு கோரியுள்ளார். இதன்போது '' உந்துருளியில்...

வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயம்!!!

வெசாக் சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைத்துள்ளனர்.நேற்று  (24) இரவு திவுலபெலஸ்ஸ ரொடலவெல விளையாட்டரங்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற விழா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சாகசக் கிணறு சரிந்து விழுந்ததில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் திவுலபெலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13,...

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்!!!

யாழ்ப்பாணம் காளி கோவில் வீதி, தாவடி தெற்கு பகுதியை சேர்ந்த  31 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரும் மகளும் பிரான்ஸில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர் இரவு (15) உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img