சூர்யாவின் கருப்பு திரைப்படம் மே 15,அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் 3வது வாரத்தில் உலகளவில் ₹300 கோடிக்கு மேல் வசூலித்தது. இது தற்போது சூர்யாவின் அதிக வசூல் செய்த படமாகியுள்ளது.
அதேபோல 8 நாட்களில் ₹200 கோடிக்கு மேல் வசூலித்து. 2026 இல் ₹200 கோடியைத் தாண்டிய முதல் தமிழ்ப் படமாகியுள்ளது.
9வது நாளில் தமிழ்நாட்டில் மாத்திரம் ₹100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் தமிழ்நாட்டில் ₹100 கோடி வசூலித்த முதல் சூர்யாவின் படமாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல பாடகர் திப்புவின் மகன் சாய் அபாயங்கர் இசையமைத்துள்ளார்.
கிராமத்து தெய்வமான வேட்டை கருப்பு சுவாமியின் மனித அவதாரமான சரவணன் என்ற சட்டத்தரணி கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.
இது ‘ஆறு’ படத்திற்குப் பிறகு 20 வருடங்களில் சூர்யாவும் த்ரிஷா கிருஷ்ணனும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படமாகும்.








