Saturday, May 9, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி – இவ்வார இறுதியில்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அத்தோடு 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை விரைவில்...

சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் நேற்று (2/26/2025) இடம்பெற்றது. நேற்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் நேற்று இரண்டாவது சந்திப்பு...

எதிர்வரும் 27ஆம் திகதி கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் உள்ளூராட்சி அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜூன் மாதம் 2ஆம் திகதி உள்ளூராட்சி கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தின்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட 9 கட்சிகள் இணக்கம்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி,...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும். கட்டுப்பணம்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் NPP தேர்தல் ஆணையத்துடன் சந்திப்பு!

வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர்கள் இன்று (19) தேர்தல் ஆணையத்தை (EC) சந்திக்க உள்ளனர். தேசிய மக்கள் கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நேற்று (18) ஒரு கூட்டத்தை நடத்தியது, அதில் தேர்தல் உத்திகள்...

இலங்கை தமிழரசு கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுதா?

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுவதா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்தைய பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பில் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும் என அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் பின்னர்...

எந்த நேரத்திலும் தேர்தலுக்குத் தயார் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும், தேர்தல்களை ஒத்திவைக்கக் கூடாது என்றாலும், புத்தாண்டு மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தைப் பொறுத்தவரை தனது கருத்து அல்ல, மக்களின் கருத்துதான் முக்கியம் என்று...

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தெரிவுக்கான நேர்முகத் தேர்வு விரைவில்..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வு இவ்வார இறுதியில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் குறித்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளன. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் விதத்தில் இந்த நேர்முகத் தேர்வுகள்...
- Advertisement -spot_img

Latest News

மஹிந்தவிற்கு ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன் மே 12 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம்...
- Advertisement -spot_img