Sunday, June 14, 2026
No menu items!

கத்தி

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை வெட்டிய நபர் – பொலிஸார் விசாரணை!

மது அருந்திக்கொண்டிருந்தபோது நண்பரின் கை விரலை மற்றுமொரு நபர் வெட்டிய சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். களுத்துறை, ரெமுனகொடவைச் சேர்ந்த 25 வயதுடைய நபரின் விரலே வெட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 20 ஆம் திகதி அன்றே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!

கொட்டஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ப்ளூமெண்டல் ரயில் பாதையில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு நடந்ததாகவும், பாதிக்கப்பட்டவர் மட்டக்குளியவைச் சேர்ந்த 22 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் தனது மனைவியுடன் ஒரு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து...

இபலோகம பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை!

இபலோகம, வளவ்வேகம பிரதேசத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வளவ்வேகமவில் உள்ள அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் இரவு வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் கத்திக்குத்து: இருவர் காயம்…!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரில் இருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றையவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார். மேலும், சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டுவன பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை ..!

கட்டுவன, அமுதமன பிரதேசத்தில் இன்று காலை 41 வயதுடைய நபரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img