Friday, June 26, 2026
No menu items!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை

உயர்தரப் பரீட்சை 2025: இன்று நள்ளிரவு முதல் தனியார் வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகளுக்கு தடை!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து தனியார் வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் மீது இன்று (3) நள்ளிரவு முதல் தடை அமுலாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி...

வெளியான பல்கலைக்கழக அனுமதிக்கான Z புள்ளிகள்!

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான Z புள்ளிகளைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 42,172 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த வருடம் 90,670 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்திருந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, கலைப்பிரிவுக்கு 11,717...

2025 உயர்தரப் பரீட்சை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் மற்றும் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும். இதன்படி, இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம்...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி..!

நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முதல் ஆறு நாட்களுக்குத் தேவையான வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு இன்று (23.11.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையானது 2, 312 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இந்த...

2024 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் காலவறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைவடைய இருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், அன்றைய...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img