நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

முதல் ஆறு நாட்களுக்குத் தேவையான வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு இன்று (23.11.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையானது 2, 312 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

இந்த முறை உயர்தர பரீட்சைக்காக 333, 183 பேர் தோற்றவுள்ளனர்.

அவர்களில், பாடசாலை பரீட்சார்த்திகள் 253, 380 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 79, 795 பேரும் அடங்குகின்றனர்.

உயர்தரப் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், பயிற்சி வகுப்புகள், மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஏலவே தடை விதிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகளுக்கான மாதிரி வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது, விநியோகிப்பது போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here