தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய உயிரிழப்பு விகிதம் 0.075% ஆக பதிவாகியுள்ளது.

2026 ஒகஸ்ட் 12 நள்ளிரவு வரையிலான நிலவரத்திற்கமைய பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 91,059 ஆகும்.

ஜூலையில் 29,971 பேர் பதிவான நிலையில் அதிகபட்சமாக  டெங்கு காய்ச்சலுடன் பதிவான மாதம் எதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியான பாதிப்பு விபரம்:

1. கம்பஹா: 19,406 பேர் – 21.31%

2. கொழும்பு: 18,901 பேர் – 20.76%

3. கண்டி: 8,146 பேர்

4. மாத்தறை: 6,318 பேர்

5. களுத்தறை: 5,998 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-ன் 31-வது வாரத்தில் 119 அதி-ஆபத்து மிக்க பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 1,509 புதிய நோயாளிகள் பதிவாகின்றனர்.

தொழில்துறை மற்றும் நகர்புற பகுதிகளில் நுளம்பு உற்பத்தி அதிகமாக உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். டெங்கு பரவலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here