Thursday, May 14, 2026
No menu items!

களுவாஞ்சிகுடி

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படு காயம்..!!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (07) இடம்பெற்ற வீதி விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படு காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் அளித்த தகவலின்படி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி சாலையை விட்டு விலகி  விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மாங்காட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து...

மட்டக்களப்பில் கார் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் !

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் இன்று (14) ஒரு கார் வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரில் மூன்று பேர் பயணித்த நிலையில், அவர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார், சம்பவ...

தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை அறுத்த லொறி..!

களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை அறுத்துள்ளது. லொறியில் வடம் மாட்டிக்கொண்டதால் தொலைத்தொடர்பு வலையமைப்பு வடம் இணைக்கப்பட்டிருந்த தூண் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது. தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்கள் வீதியின் குறுக்காக கிடப்பதால் இப் பகுதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த...

வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (15.03.2025) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெள்ளிக்கிழமை (14.03.2025) அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்குள்ள வயல் பகுதியில் வைத்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள  இராசமாணிக்கம் இல்லத்தில் இன்று (16/02/2025) தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதில் கட்சியின் பதில் தலைவர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மண்டூர் – மட்டக்களப்பு பேருந்து சேவை மீள ஆரம்பம்..!

இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை (01.02.2025) அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மண்டூர் பகுதியிலிருந்து இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு...

வீதியோரங்களிலிருந்து கைபேசி பார்க்கும் இளைஞர்களுக்கு முட்டுக்கட்டை..!

இளைஞர்கள் வெறுமனே வீதியோரங்களில் இருந்து கொண்டு கைபேசிகளை மாத்திரம் பார்த்துக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் திரிவதற்கும் இனிமேலும் நாம் விடப்போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் வேலைத்திட்டங்களை வழங்கவுள்ளோம். அவர்களுக்குரிய வேலைத்திட்டங்களை வழங்கி வருமானங்களை ஏற்படுத்திவிட்டால் யாரும் கைபேசிகளைத் தட்டிக் கொண்டிருப்பதற்கும், அங்கும் இங்கும் அலைந்து திரிவதற்கும் நேரமிருக்காது என தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்புத் தொகுதியின்...

களுவாஞ்சிகுடி – உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் வருடாந்த கெளரவிப்பு விழா..!

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவின் மகிழூர் கிழக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ் இயங்கும் உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும், கெளரவிப்பு விழா நிகழ்வானது இன்று 11.12.2024 (புதன்கிழமை) அமைப்பின் தலைவி திருமதி. மங்கையற்கரசி கருணாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உதயசங்கமம் மகளிர் கொத்தணி அமைப்பின் கீழ் சிறப்பாக...

களுதாவளையில் வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24.09.2024) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்....

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தின் ஊடாக மட்டக்களப்பிலிருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தின் ரயர்வெடித்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதிய நிலையில் விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் விபத்து தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

2.5 மில்லியன் டொலர் கொள்ளை; ஜனாதிபதியும் விசாரிக்கப்படுவாரா என நாமல் கேள்வி

திறைசேரி நிதி அமைப்பு ஊடுருவப்பட்டு 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை "தொழில்நுட்பப் தவறு" என சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன...
- Advertisement -spot_img