Friday, April 17, 2026
No menu items!

காவல்துறை மா அதிபர்

தேசபந்து தென்னகோன் தலைமறைவிற்கு உதவிய இருவர் கைது!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளடங்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசபந்து தென்னகோனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவர் தலைமறைவாகியிருந்தார். அவர் தலைமறைவாக இருப்பதற்கு...

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வெலிகம - பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான...

தேசபந்து தென்னகோனின்  இடைக்காலத் தடை மனு நிராகரிப்பு!

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரி, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் தமது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை...

ரிட் மனு மூலம் தேசபந்து தென்னகோனை கண்டுபிடிக்க முடியும்; நிஜாம் காரியப்பர்!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான நிஜாம் காரியப்பர், இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகிறார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் காரியப்பர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யும்போது தென்னகோன் சமாதான நீதிபதி முன்...

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன்; காவல்துறை பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகம - பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை...

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்!

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் இனிமேல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பதில் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரிய இன்று தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஹஃப்ல்ட்ஸ்டார்ப் நீதிமன்ற வளாகத்தை இன்று ஆய்வு செய்த பின்னர் பதில் ஐஜிபி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திற்குள் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும்,...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஹேமசிறி பெர்னாண்டோவின் வழக்கு ஒத்திவைப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்தும், ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலைத்...

முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

முச்சக்கர வண்டிகளில் சட்டப்பூர்வமாகப் பொருத்தப்பட்ட பாகங்களை அகற்றுவதைத் தடுப்பதற்கும், சட்டவிரோத மேலதிக பாகங்களை அகற்றுவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. காவல்துறை மா அதிபருக்கும், அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, முச்சக்கர...

தேசபந்து தென்னகோனின் வழக்கில் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாகப் பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாகப் பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது. குறித்த நியமனத்தைச் சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய...

அரச வாகனங்கள், சொத்துக்கள் தொடர்பில் அறிவிக்க துரித இலக்கம்!

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 1997 என்ற துரித இலக்கம் ஊடாக அறிவிக்க முடியும் எனப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதுதவிர, அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் கடத்தப்படுகின்றமை தொடர்பிலும் அந்த இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான தகவல்களை வழங்குபவர்களுக்குச்...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img